தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம்! - வீரபாண்டி ராஜா

மாரடைப்பால் உயிரிழந்த திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடல், அவரது சொந்த நிலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

veerapandi raja  funeral ceremony  funeral ceremony of veerapandi raja  வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம்  வீரபாண்டி ராஜா  நல்லடக்கம்
வீரபாண்டி ராஜா

By

Published : Oct 3, 2021, 4:14 PM IST

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா, நேற்று (அக்டோபர் 2) தனது 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தந்தையின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கிவிழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இவரது உடல் பூலாவரி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதலமைச்சர் அஞ்சலி

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிவிமானம் மூலமாக சேலம் வருகைதந்து, மறைந்த ராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் மறைந்த ராஜாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் அஞ்சலி

இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர்ப்பொதுமக்கள் என ஏராளமானோர், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு, அவரது சொந்த நிலத்திலேயே இன்று (அக்டோபர் 3) அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராஜாவின் உடல் நல்லடக்கம்

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தின் அருகே வீரபாண்டி ராஜாவின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!

ABOUT THE AUTHOR

...view details