சேலம், சென்ட்ரல் இறக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில். இவர் இன்று மதியம் 12 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் செந்திலிடம் கடனுக்கு பீர் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த மேகநாதன், அருகே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து செந்திலை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
கடனுக்கு பீர் தராத ஊழியரை தாக்கிய குடிமகன் - Fugitive citizen
சேலம்: கடனுக்கு பீர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன் டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் ஊழியரை
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த செந்திலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைதுசெய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடனுக்கு பீர் கொடுக்கவில்லை என்பதால் விற்பனை மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.