கரோனா நோய்த் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் வேலை இன்றியும், உணவு இல்லாமலும் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதனைப் போக்குவதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் இந்நிலையில், சேலத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டையுடன் கூடிய இரண்டு வேளை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் இன்று இலவச உணவை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் பொதுமக்களுக்கு நேரில் வழங்கினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடாசலம்,
"முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின்படி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு சேலம் நகர், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள 20 அம்மா உணவகங்களிலும் இரண்டு வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவை அதிமுக நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
காலையிலும் மதியமும் முட்டையுடன் கூடிய உணவு இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 20 அம்மா உணவகங்களில் தினந்தோறும் சுமார் 16 ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டுவருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் மே மாதம் மூன்றாம் தேதி வரையில் இலவச உணவு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
அம்மா உணவகங்களில் முட்டையுடன் கூடிய இலவச உணவு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து இலவச உணவைப் பெற்று உண்டனர்.
இதையும் பார்க்க: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது, விசா குறித்த பிரச்னைகள் ஆலோசிக்கப்படுகிறது - அமெரிக்காவுக்கான இந்திய தூதர்