சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெருமாள் கோயில் பகுதியில் ஆனந்தன் என்பவர் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று பலத்த காற்று வீசியதால் மின்கம்பி ஒன்றோடொன்று உரசி தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலையின் உரிமையாளர் ஆனந்தன் ஓமலலூர் ர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களின் உதவியோடு கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைத்தனர்.
கயிறு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம் - tamilnadu
சேலம்: ஓமலூர் அருகே மின்கம்பி மோதியதில் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
கயிறு ஆலைக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இந்த தீவிபத்தில் கயிறு திரிக்கும் இயந்திரங்கள், கயிறு திரிக்கும் மூலபொருட்களான நார்கள் மற்றும் கயிறு கட்டுகள் உட்பட ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தொளசம்பட்டி காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தொழிற்சாலை அருகே மின்மாற்றி இருக்கும் நிலையில் அதிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மின்கம்பிகள் மரத்தில் உரசிக்கொண்டு இருப்பதை அறியாமல், மின் பணியாளர்கள் அலச்சியமாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர்.