சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்கசிவால் திடீரென தீ பற்றி எரிந்தது. பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். அதற்குள் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.
ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்!
சேலம்: ஆத்தூர் அருகே தனியாருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த திடீர் விபத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து, அப்பெண்ணை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.