சேலம் மாவட்டம் லீ பஜார் பகுதியில் பிரபு ராகவன் என்பவருக்குச் சொந்தமான, பழைய காட்டன் துணிகளை அரைத்து, பஞ்சு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (நவ.12) வழக்கம்போல ஊழியர்கள் பணிகளை மேற்கொண்ட போது, திடீரென ஆலையிலுள்ள குடோனில் தீ பற்றியது. தீயை அணைக்க ஊழியர்கள் முற்பட்டபோது மளமளவென தீ குடோன் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியேறினர். பின்னர், இது குறித்து பள்ளப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.