சேலம்: பசும்பால் மற்றும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பால் லிட்டருக்கு ரூ.45 எனவும் எருமைப்பால் லிட்டருக்கு ரூ.54 எனவும் வழங்க வலியுறுத்தி சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெற்றியில் நாமம் போட்டும், கறவை மாடுகள் மற்றும் பால் கேனுக்கு நாமம் போட்டும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். இல்லை என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களும் அதன் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் மூலம் தோற்கடிக்கப்படுவார்கள்.