சேலத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், காலாவதியான உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, சேலத்தில் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, மளிகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், பைகளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள், காலாவதியான உணவு பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.