தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருதலை காதல்; கல்லூரி மாணவர் விபரீத முடிவு! - Engineering college student commits suicide

சேலத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்: மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்: மாணவன் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Dec 3, 2022, 7:00 PM IST

சேலம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன். சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இவர் கடந்த 1 வாரமாகவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவர் திடீரென தனது விடுதி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக சீமாஷ்ரூபனை மீட்ட மாணவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீமாஷ்ரூபன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்: மாணவன் தூக்கிட்டு தற்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒருதலை காதலில் மாணவன் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மனவேதனையில் பேசி வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details