தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வேட்பாளரின் வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் அலுவலர்கள்! - பொன்.கெளதமசிகாமணி

சேலம்: கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி பரப்புரை மேற்கொண்ட போது, அவரது வாகனத்தை தேர்தல் அலுவலர்கள் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர்

By

Published : Mar 29, 2019, 2:47 PM IST

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி, ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வீராணம், சின்ன வீராணம், பள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இதனிடையே மக்களிடம் வாக்கு சேகரித்த கெளதமசிகாமணி கிராமங்களில் நிலவிவரும் குடிநீர் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணியின் வாகனத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினரின் ஒத்துழைப்போடு வாகனம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் எதுவும் கிடைக்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details