தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரம் - எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி - அதிமுக தலைமை அலுவலக சாவி

அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், உண்மை தர்மம் வென்றுள்ளது என்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Etv Bharat எடப்பாடி மகிழ்ச்சி
Etv Bharat எடப்பாடி மகிழ்ச்சி

By

Published : Sep 12, 2022, 9:56 PM IST

சேலம்: எடப்பாடி சட்டப்பேரவைத்தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு குடியிருப்புவாசிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும். அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் உண்மை தர்மம் நீதி வென்றுள்ளது” எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கெனவே தொகுதிகளில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியாத முதலமைச்சர், தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்னைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி உள்பட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்னைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:Video: குடியிருப்புப்பகுதிகளில் உலா வரும் கருஞ்சிறுத்தைகளின் திக்.. திக்.. சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details