தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 15, 2021, 3:38 PM IST

ETV Bharat / state

திமுக அரசு நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம்
நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம்

சேலம்:கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாளைய தினம் நானும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம்.

வெள்ளம் பாதிப்பு குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். 100 ஏரி நிரப்பும் திட்டம் 60 விழுக்காடு முடிந்த நிலையில், திமுக அரசு அதனை மெத்தனமாக செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதால்தான் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

திமுக அரசு நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம்

வெள்ளப் பாதிப்புக்கு காரணம்

வெள்ளநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறினால், மறுப்பு தெரிவிக்க திராணி இல்லாத மு.க.ஸ்டாலின் மிரட்டுகிறார். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார்.

புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை

அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை மக்களுக்கு எச்சரிக்கை: மீண்டும் வருகிறது கனமழை

ABOUT THE AUTHOR

...view details