தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீர் விவகாரம் - வெடிக்கும் போராட்டம் - protest

சேலம்: காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

By

Published : Aug 6, 2019, 5:10 PM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைல் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் - வெடிக்கும் போராட்டம்

அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details