சேலம்: தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று (நவ. 7) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, செல்போன்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு, சேலம் மாநகரில் தற்போது 40 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.