தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2021, 7:44 PM IST

ETV Bharat / state

'ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் வேண்டும்'- கொளத்தூர் மணி

சாதி மறுப்பு திருமணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆணவ படுகொலைகளை தடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார்.

ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் வேண்டும்
ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம் வேண்டும்

சேலம்: திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பவதாரணி - மணி ஆகியோரின் சாதி மறுப்பு திருமணம் இன்று (செப்.1) நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி, முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொளத்தூர் மணி, "நாடு முழுவதும் தற்போது சாதி மறுப்பு திருமணங்கள் அதிகரிக்கின்றன. ஆனால் அவர்களின் பாதுகாப்பு இன்றளவிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மத்திய அரசு சட்டம்

சாதி மறுப்பு திருமணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டுவந்தது.

ஆனால் அச்சட்டம் 12 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு... எடப்பாடி பயப்பட அவசியமில்லை - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details