தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உப்பு இல்லாமல் தான் சாப்பிடுகிறேன்' அண்ணாமலைக்கு கே.என்.நேரு பதில் - அண்ணாமலைக்கு அமைச்சர் கேஎன்நேரு பதில்

உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம் என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உப்பு போட்டுதான் சாப்பிடுறீங்களா என கேட்டார். அதற்கு உடம்பு சரியில்லை, உப்பு இல்லாமல் தான் சாப்பிடுகிறேன் என அமைச்சர் கே.என்.நேரு கிண்டலாக பதிலளித்துள்ளார்.

அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

By

Published : Dec 22, 2022, 1:12 PM IST

சேலம்: திமுகவினர் எப்போதும் கருணாநிதி குடும்பத்திற்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பவர்கள். உதயநிதிக்கு மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம் என்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருந்தார்.

இதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தங்களுக்கு வெட்கமாக இல்லையா. தன்மானம் கொஞ்சம் கூட இல்லையா. சாப்பாட்டில் உப்பு போட்டு தான் சாப்பிடுறீங்களா என்று சரமாரியாக விமர்சித்தார்.

இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று (டிச.22) வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அமைச்சர், வயதாகிவிட்டது. கொஞ்சம் உடம்பு சரியில்லை. உப்பு இல்லாமல் தான் இப்போது சாப்பிடுகிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

மேலும், அண்ணாமலை தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்களை அவர் கூறியிருக்க மாட்டார். ஒன்றிய அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தான் கூறி இருப்பார் என்றார்.

இதையும் படிங்க: லோன் வாங்கியவரை கண்டுபிடிக்க நூதன ஐடியா..! சென்னையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details