தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து பணம் பறிக்கும் திமுக பிரமுகர்- இளம்பெண் கண்ணீர்

சேலத்தில் இளம்பெண்னை முக்கிய பிரமுகர்களிடம் நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து பணம் பறிக்கும் திமுக பிரமுகர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் எழுந்துள்ளது.

By

Published : Jan 25, 2022, 5:11 PM IST

சேலம்:சேலம் மாவட்டம் எடப்பாடி இடங்கணசாலை பேரூராட்சி சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் திமுகவின் இடங்கணசாலை பேரூர் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “கடந்த 25 வருடமாக திமுக கட்சிப் பணி செய்து வருகிறேன். இந்த நிலையில் சென்ற 9 மாதங்களுக்கு முன்பு சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் செல்போன் மூலம் அறிமுகமானார்.

அவர் தனியார் நில விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் அவரிடம் ஏராளமான நிலங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் கூறினார். அதனை அடுத்து நேரிலும் என்னிடம் நண்பராக பழகினார். பின்னர் தனது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி என்னிடம் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.

நண்பராக பழகிய பெண்

தற்பொழுது, கலைச்செல்வியிடம் பழகிய நாள்களில் நான் தவறாக பழகினேன் என்று கூறி போட்டோ வீடியோ ஆதாரம் உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தரப்பில் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

மேலும் என்னிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து என்னை காப்பாற்று நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் நாகேந்திரன், “கலைச்செல்வி, அதே பகுதியை சேர்ந்த சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் செல்வம் என்பவரின் தூண்டுதலின் பேரில்தான் இது போல் நடந்து கொண்டதாகவும், செல்வம் ஈரோடு சென்னை பல்வேறு இடங்களுக்கு காரில் அழைத்துச்சென்று தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருக்கமாக பழக சொல்லி கட்டாயப்படுத்துகிறார்” எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்தப்பெண் வெளியிட்டுள்ள காணொலியில், “செல்வம் பலரிடம் பணம் பெற என்னை கருவியாக பயன்படுத்தி வருகிறார்” எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலத்தில் திமுக பிரமுகர்களுக்கு திமுக பிரமுகரே இளம்பெண்ணை அந்தரங்கமாக பழகவிட்டு, வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடியரசு தின விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு- தமிழ்நாடு அரசு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details