தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுவீடாக கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த இறையன்பு வலியுறுத்தல்!

சேலம்: கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்யும் பணியை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் இறையன்பு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வீடுவீடாக கரோனா பரிசோதனை தீவிரப்படுத்த இறையன்பு வலியுறுத்தல்
வீடுவீடாக கரோனா பரிசோதனை தீவிரப்படுத்த இறையன்பு வலியுறுத்தல்

By

Published : Jun 5, 2021, 9:22 PM IST

சேலம், ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 10 நாள்களாக இந்த இரு மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலைத் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த தலைமை செயலர், மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுவீடாக கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த இறையன்பு வலியுறுத்தல்

இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு கூறுகையில், ''அந்தந்த பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், வீடு வீடாக ஆய்வு செய்து நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்து வேண்டும். உடனடியாக, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, உயிரிழப்பை தவிர்த்திட வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனைகள்’ வழங்கினார்.

இதில் தமிழ்நாட்டில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் ஜெகநாதன், இரு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து!

ABOUT THE AUTHOR

...view details