சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மர்ம காய்ச்சலால் அதிகளவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சரியான முறையில் சிகிச்சை பெற முடியவில்லை என்று நோயாளிகள் புகார் கூறிவருகின்றனர்.
மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் திடீர் ஆய்வு - சுகாதாரத் துறை இணை இயக்குநர் திடீர் ஆய்வு
சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை இணை இயக்குநர் அன்புச்செல்வி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பிரிவில், இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
inspection
இந்நிலையில், இன்று தமிழ்நாடு சுகாதாரத் துறை இணை இயக்குநர் அன்புச்செல்வி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் நோயாளிகளிடம் விசாரணை செய்தார்.
பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக்கொள்ளமாறு அங்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் தனியார் நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார்.