சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட ஜருகுமலை, குரால் நத்தம், நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர்.
அவர்களுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, 2018ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை சேலம் மாவட்ட நிர்வாகம் சாதிச் சான்றிதழ் வழங்காமல், அம்மக்களை அலைக்கழித்துவருகின்றது.
இதனால், அதிருப்தி அடைந்த மலைவாழ் மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், சேலம் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மலைவாழ் மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், "சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பனமரத்துப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்துவருகிறோம்.
சாதிச்சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்: சாதிச்சான்றிதழ் கேட்டு சேலம் மாவட்ட மலைவாழ் மக்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாதிச்சான்றிதழ்
எங்களின் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க சாதிச் சான்றிதழ் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு வழங்கும் சலுகைகளையும் பெறமுடியாமல் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவருகிறோம்.
எனவே, உடனடியாக மலைவாழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மலைவாழ் மக்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம்" என்று தெரிவித்தனர்.