தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் ! - நங்கவள்ளி

சேலம்: நங்கவள்ளி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலு என்பவரை அதே பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதால் அக்கட்சியின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் !

By

Published : Jul 17, 2019, 9:07 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம். அவருடைய சகோதரர் வேலு என்பவர் நங்கவள்ளியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஜவுளிக் கடையில் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் வேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி அதில் பலத்த காயம் அடைந்ததார்.

நங்கவள்ளி பேருந்து நிலையம்

இச்சம்பவத்தை பார்த்த ஜவுளி கடையில் வேலை பார்த்த பெண் ஊழியர் சத்தம் போட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடி வர அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிறகு உயிருக்கு போராடிய வேலுவை சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து நங்கவள்ளி காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்தனர். மாவட்ட எஸ்பி தீபா கானிகர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் கடையடைப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details