சேலம்:பெரியார் பல்கலைக்கழகத்தில் தெய்வராணி என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பணி நிமித்தமாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் கடந்த 2011ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பெரியார் பல்கலைக்கழகம் தன் மீது மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து சேலம் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் தெய்வராணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 2021ம் ஆண்டு விசாரித்த நீதிமன்றம், தெய்வராணிக்கு, மீண்டும் பணி வழங்கச் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தெய்வராணி, தனக்கு உடனடியாக பணி வழங்கக் கோரி சேலம் தொழிலாளர் நலத்துறை நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.