கள்ளக்குறிச்சிசங்கராபுரம் அருகேவுள்ள கொசப்பாடி கிராமத்தைச்சேர்ந்தவர், ஓட்டுநர் ரமேஷ். இவருக்கும் அதே கிராமத்தைச்சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணுக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இதனால், இருவரும் தங்களது கணவர், மனைவியைப் பிரிந்து கடந்த 10 நாள்களுக்கு முன்னர் சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் கொசப்பாடியில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதனையடுத்து ரமேஷ் மற்றும் ரஞ்சிதா உறவினர்கள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சங்கராபுரம் காவல் துறையினர் மூலமாக சின்னசேலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சின்னசேலம் காவல் துறையினர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். கதவு திறக்காத நிலையில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.