சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட மதுபானம், கள்ளச்சாராயம் ஆகியவற்றின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் நிறைவுபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளச் சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மேலும், கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் எமன் போன்ற வேடமணிந்து விழிப்புணர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மதுபானத்தின் தீமைகள் குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மதுவிலக்குப் பிரிவு துணை ஆணையாளர் சிவக்குமார் பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கொரோனா வைரஸ் தாக்கியதாக நினைத்து ஒருவர் தற்கொலை