தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு!

சேலம் : கோரிமேடு அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், நூறு படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு
சேலத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

By

Published : Apr 12, 2021, 8:56 PM IST

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. இதனைத் தொடர்ந்து கோரிமேடு அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நூறு படுக்கைகளுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் இன்று (ஏப்.12) திறக்கப்பட்டது.

இது குறித்து சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தி பேசுகையில், " கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இரண்டாவது அலையில் நோய்த் தொற்று அறிகுறிகள் மாறியுள்ளன. கழுத்து வலி, இடுப்பு வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, கண்கள் சிவப்பாக மாறுதல் போன்றவை தற்போதைய அறிகுறிகளாக உள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சித்தா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் குணப்படுத்திடலாம். முதல்நிலை அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர். சுமார் நூறு படுக்கை வசதியுடன் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க : அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details