சேலத்தில் இன்று ஒரே நாளில் 624 பேருக்குக் கரோனா உறுதி!
சேலம்: கரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 624 பேர் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே 05) 624 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், `சேலம் மாநகராட்சியில் 378, எடப்பாடி-9, காடையாம்பட்டி-13, கொளத்தூர்-3, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-12, மகுடஞ்சாவடி-7, நங்கவள்ளி-2, ஓமலூர்-20, சேலம் வட்டம்-12, சங்ககிரி-17, தாரமங்கலம்-9, வீரபாண்டி-20, ஆத்தூர்-13, அயோத்தியாப்பட்டணம்-19, கெங்கவல்லி-7, பனமரத்துப்பட்டி-15, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-9, வாழப்பாடி-21, மேட்டூர் நகராட்சி-5, நரசிங்கபுரம் நகராட்சி-4, ஆத்தூர் நகராட்சி-25 என மாவட்டத்தைச் சேர்ந்த 624 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 455 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 43ஆயிரத்து 800 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 39 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3ஆயிரத்து 801 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு முதல் கரோனாவால் மொத்தம் 564 பேர் உயிரிழந்துள்ளனர்` எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.