தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தோனேசிய உலமாக்கள் உள்பட 5 பேருக்கு கரோனா: சேலத்தில் அதிர்ச்சி - Salem Indonesian ulamas

சேலம்: அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 உலமாக்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 பேருக்கு கரோனா பாதிப்பு
5 பேருக்கு கரோனா பாதிப்பு

By

Published : Mar 25, 2020, 10:43 PM IST

சேலத்தில் உள்ள மசூதிகளில் மத போதனை செய்வதற்காக, இந்தோனேசியாவிலிருந்து கடந்த, மார்ச் 11ஆம் தேதி வந்த 11 உலமாக்களை, சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சேலத்திற்கு அழைத்துவந்தார். பின்னர் இவர்கள் 12 பேரும் ரஹ்மத் நகர், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், சேக் உமர், சன்னியாசி குண்டு, ஜனாத்தூல் பிர்தோஷ் ஆகிய மசூதிகளுக்கு மார்ச் 13 முதல் 22ஆம் தேதி வரை சென்று மத போதனைகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே இந்தோனேசியாவிலிருந்து வந்திருந்த உலமாக்கள் 11 பேர் உள்பட 16 பேரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். இவர்களது சளி, ரத்தம் ஆகியவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்த 12 பேர் தவிர மேலும் ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில்,

5 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு உலமாக்கள், அவர்களை அழைத்துவந்த வழிகாட்டி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் டவுன் உதவி ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: விருதுநகரில் 100 விழுக்காடு கடைகள் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details