மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தார்மீக அடிப்படையில் இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கடிதம் வழங்கினார். ஆனால் அதை ஏற்க மறுத்ததோடு, ராகுல் காந்தி தனது முடிவை கைவிட வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பலரும் வலியுறுத்திவந்தனர்.
'ராகுல் பதவி விலகக்கூடாது' - தொண்டர் தற்கொலை முயற்சி - காங்கிரஸ்
சேலம்: ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வேண்டுமென, சேலத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
congress
இந்நிலையில், இன்று சேலம் மாவட்ட மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் தொடர வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயன்றார். அப்பொழுது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.