சேலம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தைமுன்னிட்டு மதுபானக் கடைகள், பார்கள் மூடப்படுகின்றன.
சேலத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு! - Collector orders closure of liquor shops in Salem on Thiruvalluvar Day
சேலம்: வரும் ஜனவரி 15 ஆம் தேதி, திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சி.அ.இராமன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.இராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்" தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உத்தரவின்படி மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென உள்ளது. வரும் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏ ஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், அரசு மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் அரசு மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
TAGGED:
salem collector raman