தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐந்து பேரூராட்சிகளில் ரூ.17.30 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

By

Published : Jul 17, 2020, 8:50 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் மனைவி தமிழரசிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் அரசு வேலைக்கான பணி ஆணையினை அவர் வழங்கினார்.

பின்னர் கட்டிட நிகழ்ச்சியில் பேசிய அவர், "எடப்பாடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மேச்சேரி நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 698 கிராம குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி, வீரக்கல்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் 17.30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

வெள்ளாளபுரம் ஊராட்சியில் சரபங்கா நதியின் குறுக்கே 4.42 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்கள் வைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி வருகிறோம்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, பி.எட் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ஜலகண்டபுரம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியர் ராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை ,வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசின் சலுகைகளை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details