தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி - CM Palaniswamy recent updates

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்தில் எளிமையாக பொங்கல் விழாவினைக் கொண்டாடினார்.

CM Palaniswamy celebrates Pongal in his village
பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Jan 14, 2021, 2:21 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா கொண்டாட, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் சென்றார்.

பொங்கல் கொண்டாட்டம்

சிலுவம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தின் பின்புறம் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், எடப்பாடி வட்டார அதிமுக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கோயிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் சில மாதங்களுக்கு முன் காலமானார். இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழா, முதலமைச்சர் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது. முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்: துணிந்து அடக்கும் வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details