நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் அறிக்கை வெளியீடு, கட்சி தலைவர்களின் பரப்புரை பயணங்கள் என தமிழ்நாட்டுஅரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
சேலம் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்த எடப்பாடி - பழனிசாமி
சேலம்: மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகப்படுத்திவைத்தார்.
samy
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட இருக்கும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு, பாமக தலைவர் ஜி.கே.மணி, தேமுதிகவினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.