சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சின்ன திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி இந்த கோயிலில் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு பூஜைகளும் புரட்டாசி சனிக்கிழமையன்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று மாலை 6 மணி அளவில் தேர்த்திருவிழா நடந்தது. இவ்விழாவில் அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.