குழந்தை வளர்ப்பு மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திறன் வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கு, சேலம் தனியார் மருத்துவமனை சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. குழந்தைகளுக்கான தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில், 'குழந்தைகள் வளர்வதற்கு எந்த வகையில் பெற்றோர்களின் பங்கு உதவி செய்யும்' என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளை நன்கு வளர்ப்பது குறித்த திட்டமிடல் பற்றியும்; பெற்றோர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் குழந்தைகளுக்கான மருத்துவர் பிரியதர்ஷினி வழங்கி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.