சேலம்:மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன். சென்னையில் வசிக்கும் இவரது அண்ணனின் மனைவி கார்த்திகா (30) ஹரிஹரனின் வீட்டிற்கு கடந்த 8ஆம் தேதி வந்திருந்தார்.
இவர் நேற்று (அக்.10) காலை 11 மணி அளவில் விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைக்குச் சென்று காய்கறிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
தாலி செயின் பறிப்பு
அப்போது அவர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் கார்த்திகாவை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கார்த்திகா ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றினர்.
மேலும் ஆத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்தூரில் இதேபோல் அடிக்கடி நடைபெறும் வழிப்பறி சம்பவங்களுக்கு ஆத்தூர் காவல்துறை முற்றுப்புள்ளி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க:ஆணவ படுகொலைகளை தடுக்க அரசு முனைப்பு காட்டவில்லை - தொல்.திருமாவளவன்