சேலம்:மத்திய அரசின் செயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் சக்திவேல் என்பவர் பணியில் இருந்த பொழுது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனையடுத்து முதல் உதவிக்காக ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து இரும்பாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.