தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் தவறி விழுந்த மதுபாட்டில்கள் - சாலையில் கிடந்த மது பாட்டில்கள்

சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் கிடந்த மதுபாட்டில்களை போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்து சென்ற மது பிரியர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.

Bottles of Wine on the Road
Bottles of Wine on the Road

By

Published : May 8, 2021, 4:38 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (மே 7) காலை 9 மணியளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனை போக்குவரத்து காவல் துறையினர் சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை இரண்டு அட்டை பெட்டிகளில் எடுத்து வந்தார். அங்குள்ள வேகத்தடையின் மீது வாகனம் ஏறி இறங்கியபோது, மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டி சாலையில் விழுந்தது.

சாலையில் கிடந்த மது பாட்டில்கள்: முண்டியடித்து பொறுக்கிய மது பிரியர்கள்!

இவற்றில் ஒரு சில பாட்டில்கள் உடைந்துவிட்டது . மீதமுள்ள மது பாட்டில்களை எடுத்து வந்த இளைஞர் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு வருவதற்குள், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பலரும் போட்டோ போட்டி போட்டுக் கொண்டு மது பாட்டில்களை தூக்கி கொண்டு ஓடினர் .

சாலையில் கிடந்த மது பாட்டில்கள்: முண்டியடித்து பொறுக்கிய மது பிரியர்கள்!

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர், மது பாட்டில்களை எடுத்தவர்களை விரட்டினர். பின்னர் மதுபாட்டில்களை ஒவ்வொன்றாக எடுத்து அட்டைப் பெட்டியில் போட்டு மதுபாட்டில்களை எடுத்து வந்த இளைஞரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details