தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம் - salem latest news

சேலம் : நாளை நடைபெறவுள்ள பாஜக மாநில மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

bjp open ground conference arrangements
bjp open ground conference arrangements

By

Published : Feb 20, 2021, 8:41 PM IST

தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (பிப்.21) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் 20 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ், பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையிலும், வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details