சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டைகோவில் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம்(27). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்திருக்கிறார். இவர் பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற போது சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இப்ராகிம் அந்த மாணவியுடன் நெருக்கமாக பழகி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்தது. அப்போது அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த வெங்கடேசன், இப்ராகிமை அழைத்து விசாரித்தார். பின்பு,போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வெங்கடேசன், பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .