தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜவுளிக் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு! - cctv visuals

சேலம்: ஜவுளிக் கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இருவரைக் காவல் துறையினர்  தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

By

Published : Jul 21, 2019, 7:43 PM IST

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஜீவானந்தம். இவரது சகோதரர் வேலு நங்கவள்ளியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி கடையினுள் புகுந்த இரு நபர்கள் வேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

உயிருக்குப் போராடிய வேலுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காகச் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி மேல் சிகிச்சைக்காகப் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடை உரிமையாளரை வெட்டிய சதீஷ், மணி ஆகியோரை பிடிக்கத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், கடைக்குள் புகுந்து வேலுவை வெட்டிய சிசிடிவி காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details