மாற்றுத்திறனாளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதை உறுதிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - சிறப்பு பேருந்து ஏற்பாடு
சேலம்: பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத, சிறப்பு பேருந்துகள் மூலம் இன்று ( ஜூன் 8) சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சென்னை, வேலூர், பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் பொதுத்தேர்வு எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முழு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் பொதுத்தேர்வு எழுத அவர்கள் தங்கி பயிலும் பள்ளிகளின் விடுதிகளுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
அவர்கள் தேர்வு எழுதி முடித்த பிறகும் சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மாணவி சுபஸ்ரீ கூறுகையில், "தேர்வு எழுத ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ள அரசுக்கு நன்றி" என்றார்.