தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில ஆக்கிரமிப்பு: கருணை கொலை செய்யுமாறு ராணுவ வீரரின் குடும்பத்தினர் மனு!

சேலம்: உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் தங்களை கருணைக் கொலை செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் நூதன மனு!
மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் நூதன மனு!

By

Published : Aug 25, 2020, 7:38 PM IST

சேலம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உயிரிழந்தார்.

இவருக்கு அரசு ஏற்கனவே வழங்கியிருந்த அரசு புறம்போக்கு நிலத்தை முருகனின் சகோதர்களுடையக் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாது, முருகனின் குடும்பத்திற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி முருகனின் மனைவி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவில், நிலத்தை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், என்னையும், எனது மகள்களையும் கருணைக் கொலை செய்து விடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முருகனின் குடும்பத்தினரிடம் கேட்கையில், “இந்த பிரச்னைத் தொடர்பாக பல்வேறு புகார்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசு புறம்போக்கு நிலத்திற்கு அனுமதி பெற்று 1980 முதல் நிலவரி செலுத்தி வந்துள்ள நிலையிலும், தங்களுக்கு நிலம் சொந்தமில்லை எனக் கூறி எனது கணவரின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்” என்றனர்.

மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் நூதன மனு!

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:266 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details