தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள் அதிகளவில் பரிசுப்பொருள்களும், லஞ்சமும் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்! - லஞ்ச ஒழிப்புத் துறை
சேலம்: டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் குடோனில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிரடி சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்!
இந்நிலையில், சேலம் அருகே சந்தியரில் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், இதுவரை ரூபாய் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட மேலாளர் அம்பாயிரம் உள்ளிட்ட ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடந்திவருகின்றனர்.