தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தினருக்கு கரோனா: தனியறையில் தவித்த மூதாட்டி மீட்பு!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தனியறையில் தவித்து வந்த மூதாட்டியை போதிமரம் தனியார் தொண்டு மீட்டு பராமரித்து வருகின்றனர்.

மூதாட்டி மீட்பு
மூதாட்டி மீட்பு

By

Published : Jun 7, 2021, 10:31 PM IST

சேலம்: மகன் குடும்பத்தினர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஆதரவின்றி தனியறையில் தவித்த மூதாட்டியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர்.

டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ராதா (95). இவரின் கணவர் தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இவர்களுக்கு நான்கு மகன்கள் இருந்த நிலையில், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மூதாட்டி ராதா, தனது கடைசி மகனான ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் வசித்து வருகிறார்.

மூதாட்டி மீட்பு

மேலும் மூதாட்டி ராதாவுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர், அவரின் மனைவி, மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அனைவரும் சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மூதாட்டி ராதா வீட்டில் தனியறையில் உணவின்றி தவித்து வந்துள்ளார். தகவலறிந்த அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அளித்த உத்தரவின் பேரில், சேலத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லம் நடத்தி வரும் போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு, முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து போதிமரம் நிர்வாகம் மூதாட்டியை பராமரித்து வருகிறது.

இதையும் படிங்க: பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details