தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் கபசுரக் குடிநீர் வழங்கிய அமமுகவினர் - corona latest news

சேலம்: மல்லமூப்பம்பட்டியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கவரும் பொதுமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கினர்.

salem
salem

By

Published : Apr 19, 2020, 12:55 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசியப் பொருள்களை விற்பனைச் செய்யும் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் கபசுரக் குடிநீர் வழங்கிய அமமுகவினர்

அதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், தனியார் நிறுவனத்தினர் உள்ளிட்டோர், கரோனா நிதி வழங்கியும், ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தும் வருகின்றனர். அதையடுத்து, சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மூலக்கடை பகுதியில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கபசுரக் குடிநீர், முகக் கவசங்களை வழங்கினர். அதில் சேலம் வடக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மலிவு விலையில் முகக்கவசம், சோப்புத் திரவம் விற்பனை: சிரமத்தின் மத்தியிலும் சேவை மனப்பான்மை

ABOUT THE AUTHOR

...view details