தமிழ்நாட்டில் உள்ள 16 ஆவின் கிளை நிறுவனங்களுக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், 240 பால் டேங்கர் லாரிகளை இயக்கி வருகின்றனர். இந்த லாரிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டுக்கான டெண்டர் காலம் முடிந்த நிலையில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
40விழுக்காடு வாடகை உயர்த்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை - milk lorry
சேலம் : ஆவின் நிறுவனத்துக்கு இயக்கப்படும் பால் டேங்கர் லாரிகளுக்கு 40 விழுக்காடு வாடகை உயர்த்தி வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் "டெண்டர் காலம் முடிந்த நிலையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் பால் டேங்கர் லாரிகளை இயக்கி வருகிறோம். மறு டெண்டர் அறிவிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தோம் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
தற்போது டீசல் விலை, சுங்கசாவடி கட்டணம், ஓட்டுநருக்கான சம்பளம் அதிகரித்துள்ளதால் 40விழுக்காடு கூடுதல் வாடகை தொகையுடன் டெண்டர் அறிவிக்க வேண்டும். இம்மாதம் 15ஆம் தேதிக்குள் டெண்டர் அறிவிக்கவில்லை என்றால், 15ஆம் தேதிக்கு பிறகு பால் டேங்கர் லாரிகள் அனைத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.