தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவர் இடிந்த விபத்தால் அறுவை சிகிச்சை: அவசர ஊர்தியில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த நபர் - ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சேலம்: சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவர், வருமானமின்றி தவித்து வருவதாகக்கூறி, அரசு உதவி செய்யக் கோரி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.

ஆட்சியரிடம் மனு அளிக்க அவசர ஊரதியில் வந்த நபர்
ஆட்சியரிடம் மனு அளிக்க அவசர ஊரதியில் வந்த நபர்

By

Published : Jan 12, 2021, 9:21 AM IST

சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தர்மதுரை (30). இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த தர்மதுரை மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடிபாடுகளில் சிக்கியதில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து தர்மதுரைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எழுந்து அமர முடியாத நிலையில் உள்ளார்.

ஆட்சியரிடம் மனு அளிக்க அவசர ஊர்தியில் வந்த நபர்

இந்நிலையில் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று கூறி, தர்மதுரை, அவரது மனைவி, பெண் குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவசர ஊர்தி மூலம் வந்து மனு அளித்தனர்.

குடும்பச் செலவிற்கு வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகக் கூறிய, அவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவம், உணவிற்கு கூட வழியில்லை எனக் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு கொலை: கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details