சேலம் அன்னதானப்பட்டி நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் வனிதா. இவருக்கு அருண் பிரசாத் என்ற மகன் உள்ளார். இவர் நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சுப்பிரமணியம் என்பவரிடம் கட்டட வேலைக்காக சென்று, அவருடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இருவரும் நட்புடன் பழகி தங்களுக்குள் நெருங்கி பழகியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி அடிக்கடி சுப்பிரமணியத்திடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வனிதா பணம் பெற்றுள்ளார்.
சுப்பிரமணியம், தான் கொடுத்த பணத்தை திரும்ப வனிதாவிடம் கேட்டபோது அவர் சுப்பிரமணியத்துடன் வைத்திருந்த உறவை முறித்துக் கொண்டார். இதனால், கோபமடைந்த சுப்பிரமணி, வனிதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் தன்னுடன் நெருங்கி பழக அவர் வனிதாவை பல முறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜன.27) காலை சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலுள்ள நெத்திமேடு பேருந்து நிறுத்தத்தில் வனிதா, தனது மகனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி தனது பணத்தை திருப்பி கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கட்டட மேஸ்திரி சுப்பிரமணி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வனிதாவை வெட்ட முயற்சித்துள்ளார்.