சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் ஓரிரு நாட்களாக மழைபெய்து வருவதால் அங்குள்ள ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், இன்று காலை ஏற்காடு மலையில் இருந்து காரைக்காடு வழியாக செல்லக்கூடிய ஓடை ஒன்றில் ஏழு அடி நீள மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டுள்ளது.
மழை நீருடன் அடித்து வரப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு!
சேலம்: ஏற்காடு அருகே ஓடையில் அடித்து வரப்பட்ட ஏழு அடி நீள மலைப்பாம்பை, வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சேலம்
இதனைக் கண்ட காரைக்காடு ஊர் மக்கள் அச்சமடைந்து அஸ்தம்பட்டி வனசரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் பரசு ராமமூர்த்தி, மோகன், வனக்காப்பாளர் மாதையன் ஆகியோர், மலைப்பாம்பை கைப்பற்றி ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் விட்டனர்.