சேலம்: ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் கிராமம் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பைபாஸ் மேல்புறம் நேற்று நள்ளிரவு 12:30 மணி அளவில் சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் (ட்ராவல்ஸ்) ஆத்தூர் முல்லைவாடி கிராமத்திலிருந்து வந்த ஆம்னி வேணும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆம்னி வேனில் சென்ற
1) சரண்யா (வயது 23)
2) சுகன்யா (வயது 27)
3) சந்தியா (வயது 23)
4) ரம்யா (வயது 25)
5) ராஜேஷ் (வயது 21)
ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
6) தன்ஷிகா (வயது 11) என்பவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காயம் அடைந்த
1) சுதா (வயது 36)
2) பெரியண்ணன் வயது 38 )
3) புவனேஸ்வரி (வயது 17)
4) கிருஷ்ணவேணி (வயது 45)
5) உதயகுமார் (வயது 17)
ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளானவர்கள் ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் தங்களது உறவினரின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள். இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர்.
ஆத்தூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் - போதை ஆசாமி கைது